Wednesday, December 27, 2006

முத்தரசநல்லூர் பற்றிய கட்டுரை விக்கிபீடியாவில்...

அன்பு முத்தரசநல்லூர் நண்பர்களே,
 
நான் பள்ளிப் படிப்பில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வரலாறுகளை படித்துள்ளேன். அப்போதெல்லாம், நாம் பிறந்து வளர்ந்த இந்த முத்தரசநல்லூர் பற்றி தெரிந்து கொள்ள ஏதாவது குறிப்பு இருக்கிறதா என்று நூலகத்தில் தேடியிருக்கிறேன். கிடைக்கவில்லை.  இனி வரும் சந்ததியினருக்காவது, நாம் ஒரு குறிப்பை விட்டுச் செல்லலாம் என்று நமது "முத்தரசநல்லூர்" பற்றிய செய்தியை ஒரு கட்டுரையாக இணைத்துள்ளேன்.  இது இன்னும் முழுமையடையவில்லை.  படித்து பாருங்கள், உங்களுக்கு அல்லது உங்கள் பெற்றோர், தாத்தா ஆகியோருக்கு ஏதெனும் தகவல் தெரிந்திருந்தால், இக்கட்டுரையில் இணைக்கலாம்.
 
புதிய தகவல்களை நீங்களே இணைக்கலாம். இல்லையேல் என்க்கு அனுப்புங்கள் நான் இணைத்து விடுகிறேன்.
 
உங்கள் குழந்தைகளுக்கு, இக்கட்டுரையைப்பற்றி அறிமுகப் படுத்துங்கள். அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள்.
 
கீழே உள்ள இணைப்பை (link) உங்கள் மவுஸினால் சொடுக்கினால், நீங்கள் "முத்தரசநல்லூர்" கட்டுரையை விக்கிபீடியாவில் படிக்கலாம்
 
 
அன்புடன்
ப. ஜெயராமன்.
 
விக்கிபீடியாவில் "முத்தரசநல்லூர்" கட்டுரையின் ஸ்கிரீன் ஸாட் (Screen shot)

Tuesday, December 12, 2006

கிராம யோகா வகுப்புகள்

அன்புள்ள முத்தரசநல்லூர் குழு நண்பர்களே!

 

வணக்கம்.  யோகா வகுப்புகள் இந்த 2006ம் வருடம், டிசம்பர் மாதம், கடைசி வாரத்தில் முத்தரசநல்லூரில் நடைபெற இருப்பதாக கேள்வியுற்று மகிழ்ச்சியடைந்தேன். 

 

நான், கடந்த 1999ம் வருடம், மே மாதத்தில், E.R. மேனிலைப்பள்ளியில் நடந்த யோகா வகுப்பில் கலந்து கொண்டேன்.  அப்போதே எனக்கு, என்னை சுற்றி உள்ள அனைவரையும் இந்த வகுப்பில் கலந்துகொள்ள செய்ய வேண்டும் என்ற உணர்வு உருவானது.  முதலில் எனது நண்பர்கள் சிலரையும், என் குடும்பத்தில் சிலரையும் அனுப்பி வைத்தேன்.  நான் பலரிடம் இந்த வகுப்பில் கலந்து கொள்ளும்படி பரிந்துரை செய்திருக்கிறேன்.  ஆனால், நேரமின்மை, பொருளாதார வசதி போன்ற காரணங்களால் எல்லோராலும் போக முடியவில்லை.

 

இப்போது, ஈசா யோகா வகுப்பு, முத்தரநல்லூரை தேடி வந்திருக்கிறது.  இந்த வாய்ப்பை நமது கிராம மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள அனைவரிடமும் இதைப்பற்றி தெரிவிக்கவேண்டும்.  இதில் கலந்து கொள்ள நன்கொடையாக ரூ.250/- பெறுகிறார்கள்.  இடம், துவங்கும் நாள், பதிவு செய்வது போன்ற விபரங்களுக்கு, பழனியாண்டவர் மெடிக்கலில் உள்ள திரு. P. மோகன் அவர்களை தொடர்பு கொள்ளவும்.

 

அன்பான, ஆராக்கியமான, அமைதியான முத்தரசநல்லூரை உருவாக்குவோம்! 
இந்த மகத்தான பணியில் உங்களையும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறேன்!!

 

அன்புடன்,

ப. ஜெயராமன்