Sunday, October 29, 2006

முத்தரசநல்லூர் - 3000 அடி உயரத்தில்...

முத்தரசநல்லூர் - Mutharasanallur

இன்னும் சற்று கீழே சென்று சுமார் 3000 அடி உயரத்தில் எடுத்தது இந்தப்படம். முடிந்தவரை எல்லா முக்கிய பகுதிகளையும் கண்டுபிடித்து, பெயர்களை எழுதியுள்ளேன். முத்தரசநல்லூரில் இருக்கும் யாராவது இந்தப்படத்தை கலரில் பிரிண்ட் செய்து, அங்குள்ள பள்ளிகளுக்கு கொடுத்தால் குழந்தைகளுக்கு கற்க உதவியாக இருக்கும்.


Click here to view in Full Screen
அன்புடனும் வாழ்த்துக்களுடனும்
ப. ஜெயராமன்.

Saturday, October 21, 2006

முத்தரசநல்லூர் - செயற்கைகோள் புகைப்படம்

அன்புள்ள முத்தரசநல்லூர் கிராம மக்களுக்கு,

முத்தரசநல்லூரை சுமார் 7176 அடி உயரத்திலிருந்து புகைப்படம் எடுத்து பார்த்து இருக்கிறீர்களா? இல்லை என்றால் கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள். இது செயற்கைக்கோளிலிருந்து எடுக்கப்பட்டது.

இந்தப்படத்தை முதல் முறை பார்க்கையில், மிகுந்த ஆச்சரியத்தோடும், பிரமிப்போடும் பார்த்தேன். உங்களுக்கும் இந்ந ஆச்சரியம் இருக்கும் என்று நினைக்கிறேன். தவறாமல் இதைப்பற்றிய தங்களின் கருத்துக்களை mnallur@googlegroups.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புவீர்கள் என்று நம்புகிறேன். இப்புகைப்படத்தை எனது தீபாவளி பரிசாக ஏற்றுக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ப. ஜெயராமன்
முத்தரசநல்லூர்

Thursday, October 19, 2006

Happy Diwali!

My Dear Friends,
 
Wish you Happy and Sweet Diwali!

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Regards,
P. Jayaraman
 






May God bless you all with Good Health and Happiness!
 
With Love & Regards,
P. Jayaraman

Sunday, October 15, 2006

முத்தரசநல்லூர் - அறிமுகம்

முத்தரசநல்லூர் - அறிமுகம்

இந்தியாவின் தென்கோடியில் தமிழ்நாடு மாநிலம் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் மையப்பகுதியில் திருச்சிராப்பள்ளி மாநகரம் உள்ளது. இந்த திருச்சி மாநகரத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் காவிரி ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஓர் அழகிய கிராமம்தான் முத்தரசநல்லூர்.

2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள், 7 -10 தெருக்கள், சிவன் கோவில், மதுரகாளியம்மன் கோவில், மாரியம்மன் கோவில், சில தென்னந்தோப்புகள், மாந்தோப்புகள், 10-15 கடைகள், தபால் நிலையம், மின்னனு தெலைபேசி நிலையம், ஒரு திருமண மண்டபம், சுமார் 200 - 300 ஏக்கர் விளைநிலம் இவையனைத்தும் முத்தரசநல்லூர் கிராத்தை செழுமை படுத்துகிறது.

இங்கு இரயில் தண்டவாளம், திருச்சி-கரூர் பைபாஸ் சாலை, காவிரி ஆறு இவை மூன்றும் அருகருகே இருப்பதை காணலாம்.



இந்த ஊரில் வாழும் மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக இப்பதிவு உழைக்கும்.

நோக்கங்கள்
  • பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் பள்ளிக்கு அனுப்புதல்
  • மாணவர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்கி அவர்களின் முன்னேற்றத்துக்கு உதவுதல்
  • வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை வெளியிடுதல்
  • கிராமத்தைப் பற்றி தகவல்களை வெளியிடுதல்
  • மரம் வளர்க்க மக்களை ஊக்குவித்தல்
  • அழகான கிராமமாக மாற்றுதல்
  • அரசிடமிருந்து வரும் திட்டங்கள் அனைத்தையும் மக்களை சென்றடைய உதவுதல்
  • அவ்வபோது நிகழும் நிகழ்வுகளை பதிவு செய்தல்
  • மற்றும் பல.....
முத்தரசநல்லூர் மக்கள் அனைவமும் இந்த பணியில் தங்களின் பங்களிப்புகளை வழங்கலாம். வாருங்கள்! முத்தரசநல்லூர் மக்களுக்காக, சமூக பணியாற்ற நமது நேரத்தை சிறிது செலவிடுவோம்!!

என்றும் அன்புடன்,
ப. ஜெயராமன்,
முத்தரசநல்லூர் கிராமம்.