Friday, June 01, 2007

SSLC Students awarded

Dear All,
 
SSLC students has been appreciated and awarded in Mutharasanallur.  Really, this is a good news and great.  SSLC students D. Ramya and J. Kalaivani has been appreciated and awarded by Mr. Prakash with Rs.500/- and Rs.100/- respectively. 
 

RAMYA D ( SSLC - 442753 )

SUBJECT  MARKS
LANGUAGE  092 
ENGLISH 084 
MATHS 096 
SCIENCE 087 
SOCIAL  093 
TOTAL  452 
RESULT PASS 
 
 

KALAIVANI J ( SSLC - 442836 )

SUBJECT  MARKS
LANGUAGE  092 
ENGLISH 081 
MATHS 088 
SCIENCE 080 
SOCIAL  086 
TOTAL  427 
RESULT PASS 
 
 
I am happy and appreciate Mr. Prakash for awarding the students.  The reason for sharing these information with you is that we (MTNL people) are lack in education.  We need to encourage and guide the students for their education.  I am enjoying the benefits of education.  And I want everyone in MTNL has to do their education well and enjoy the benefits in future. 
 
So, if you find time, guide the SSLC pass out students for selecting the right course for their skills.
 
Note: If anyone got higher than this marks, please post their marks in this group, they will also be awarded.
 
Let's make it happen.
 
Thank you
P. Jayaraman
Hyderabd 
 

Wednesday, January 10, 2007

VAT FAQ & Rate of Tax - Tamil Version

Dear all,
 
I have attached two .pdf files as below for your reference.
 
1. VAT_FAQ_tamil.pdf
This file contains Frequently asked questions and answers in Tamil.
 
2. RATES_OF_TAX.pdf
It has list of products and Rate of tax in Tamil.
 
With Love & Regards,
P. Jayaraman
 

Tuesday, January 09, 2007

பொங்கல் (திருநாள்)

பொங்கல் (திருநாள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பொங்கல் தமிழர் திருநாளாக தமிழகத்தில், இலங்கை போன்ற தமிழர்கள் வாழும் நாடுகளில் தை முதல் நாள் கொண்டாடப்படுகின்றது. பொங்கல் விழா, தமிழர்களின் தனிப்பெரும் விழா. எத்தனையோ விழாக்களை தமிழர்கள் கொண்டாடினாலும் வேறெந்த விழாவுக்கும் கொண்டாட்டத்துக்கும் இல்லாத சிறப்பு பொங்கலுக்கு மட்டும் உண்டு. மற்ற விழாக்கள் போலன்றி, பொங்கல் எல்லா சமயத்தினருக்கும் பொதுவானதாகவும், சமயம் கடந்ததாகவும் உள்ளது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகை நான்கு நாள் பண்டிகையாகும். மார்கழி கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து பதியன புகுதல் வழக்கம். தை மாத முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அடுத்தடுத்த நாட்களில் மாட்டுப்பொங்கலும் (பட்டிப் பொங்கல்), காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கை சக்திகளுக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல் ஆகும்.

பொங்க வைக்கும் முறை

பொங்கல் நாளன்று புத்தாடை அணிந்து, புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து சாணத்தில் பிள்ளையார் பிடித்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று "பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இடுவர். தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது என்பர்.   
 
அனைவருக்கும் இனிய பொங்கள் நல்வாழ்த்துக்கள்!
 
அன்புடன்
ப. ஜெயராமன்
முத்தரசநல்லூர்
 
----------------------------------------------------------------------------------------------
ஆதாரம்: விக்கிபீடியா கட்டுரை பொங்கல் (திருநாள்)
 

Wednesday, December 27, 2006

முத்தரசநல்லூர் பற்றிய கட்டுரை விக்கிபீடியாவில்...

அன்பு முத்தரசநல்லூர் நண்பர்களே,
 
நான் பள்ளிப் படிப்பில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வரலாறுகளை படித்துள்ளேன். அப்போதெல்லாம், நாம் பிறந்து வளர்ந்த இந்த முத்தரசநல்லூர் பற்றி தெரிந்து கொள்ள ஏதாவது குறிப்பு இருக்கிறதா என்று நூலகத்தில் தேடியிருக்கிறேன். கிடைக்கவில்லை.  இனி வரும் சந்ததியினருக்காவது, நாம் ஒரு குறிப்பை விட்டுச் செல்லலாம் என்று நமது "முத்தரசநல்லூர்" பற்றிய செய்தியை ஒரு கட்டுரையாக இணைத்துள்ளேன்.  இது இன்னும் முழுமையடையவில்லை.  படித்து பாருங்கள், உங்களுக்கு அல்லது உங்கள் பெற்றோர், தாத்தா ஆகியோருக்கு ஏதெனும் தகவல் தெரிந்திருந்தால், இக்கட்டுரையில் இணைக்கலாம்.
 
புதிய தகவல்களை நீங்களே இணைக்கலாம். இல்லையேல் என்க்கு அனுப்புங்கள் நான் இணைத்து விடுகிறேன்.
 
உங்கள் குழந்தைகளுக்கு, இக்கட்டுரையைப்பற்றி அறிமுகப் படுத்துங்கள். அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள்.
 
கீழே உள்ள இணைப்பை (link) உங்கள் மவுஸினால் சொடுக்கினால், நீங்கள் "முத்தரசநல்லூர்" கட்டுரையை விக்கிபீடியாவில் படிக்கலாம்
 
 
அன்புடன்
ப. ஜெயராமன்.
 
விக்கிபீடியாவில் "முத்தரசநல்லூர்" கட்டுரையின் ஸ்கிரீன் ஸாட் (Screen shot)

Tuesday, December 12, 2006

கிராம யோகா வகுப்புகள்

அன்புள்ள முத்தரசநல்லூர் குழு நண்பர்களே!

 

வணக்கம்.  யோகா வகுப்புகள் இந்த 2006ம் வருடம், டிசம்பர் மாதம், கடைசி வாரத்தில் முத்தரசநல்லூரில் நடைபெற இருப்பதாக கேள்வியுற்று மகிழ்ச்சியடைந்தேன். 

 

நான், கடந்த 1999ம் வருடம், மே மாதத்தில், E.R. மேனிலைப்பள்ளியில் நடந்த யோகா வகுப்பில் கலந்து கொண்டேன்.  அப்போதே எனக்கு, என்னை சுற்றி உள்ள அனைவரையும் இந்த வகுப்பில் கலந்துகொள்ள செய்ய வேண்டும் என்ற உணர்வு உருவானது.  முதலில் எனது நண்பர்கள் சிலரையும், என் குடும்பத்தில் சிலரையும் அனுப்பி வைத்தேன்.  நான் பலரிடம் இந்த வகுப்பில் கலந்து கொள்ளும்படி பரிந்துரை செய்திருக்கிறேன்.  ஆனால், நேரமின்மை, பொருளாதார வசதி போன்ற காரணங்களால் எல்லோராலும் போக முடியவில்லை.

 

இப்போது, ஈசா யோகா வகுப்பு, முத்தரநல்லூரை தேடி வந்திருக்கிறது.  இந்த வாய்ப்பை நமது கிராம மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள அனைவரிடமும் இதைப்பற்றி தெரிவிக்கவேண்டும்.  இதில் கலந்து கொள்ள நன்கொடையாக ரூ.250/- பெறுகிறார்கள்.  இடம், துவங்கும் நாள், பதிவு செய்வது போன்ற விபரங்களுக்கு, பழனியாண்டவர் மெடிக்கலில் உள்ள திரு. P. மோகன் அவர்களை தொடர்பு கொள்ளவும்.

 

அன்பான, ஆராக்கியமான, அமைதியான முத்தரசநல்லூரை உருவாக்குவோம்! 
இந்த மகத்தான பணியில் உங்களையும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறேன்!!

 

அன்புடன்,

ப. ஜெயராமன்