Simple Tips for Better TV Viewing | ||
Dr Tapas Paul | ||
The world will remain beautiful, vibrant and bright only if we take proper care of our precious eyes. Eyes are one of those parts of our body, which are stressed and strained the maximum. Every day, we subject our eyes to all kinds of stress - extreme sunlight, bright lights, glare from the computer screen and television, and hours of reading. Eyesight is usually taken for granted by all of us. We only decide to give the eyes rest when we sleep. But eye care is essential throughout our lives not because we don't want to wear spectacles but because it helps us maintain a clear vision at old age as well. People suffer from various eye problems due to negligence, unhealthy diet and genes.
What is the optimal distance to watch a TV set? | ||
| ||
|
செய்தி மற்றும் மக்கள் தொடர்பு வலைத்தளம். இது முத்தரசநல்லூர் கிராம மக்களின் வளர்ச்சிக்காக செயல்படுகிறது.
Saturday, March 20, 2010
Simple Tips for Better TV Viewing
Courtesy: Apollolife Health eNewsletter, 15 March, 2010
Jayaram10g
Sunday, March 14, 2010
மாணவருக்கு கல்வி கடன் தர மறுத்த வங்கிக்கு உயர்நீதிமன்றம் 'குட்டு'!
அன்புள்ள நண்பர்களுக்கு,
கீழ் கண்ட செய்தி, கல்வி கற்க பொருளாதாரம் ஒரு தடையில்லை என்பதை உணர்த்துகிறது. "பிச்சை புகினும் கல்வி பயில்" என்பது ஒளவையின் வாக்கு. ஆனால் நாம் கல்வி கடன் வாங்கியாவது கற்போம்.
அன்புடன்
ப. ஜெயராமன், முத்தரசநல்லூர்
வெள்ளிக்கிழமை, மார்ச் 12, 2010, 14:28[IST]
சென்னை: கல்வி கடன் வழங்காமல் அலைகழித்ததால், மாணவரின் வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர் கோரிய கடன் தொகையையும் வழங்க உத்தரவிட்டது. கோவையில் உள்ள `பார்க் ஸ்கூல்' என்ற கல்வி நிறுவனத்தில் தினேஷ் என்ற மாணவர், `ஏரோநாட்டிக்கல்' பொறியியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
தினேஷ் கல்வி பயில்வதற்காக பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் சேலம் ஆத்தூர் கிளையில் அவரது தந்தை கஜேந்திரன் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். ரூ.6 லட்சத்து 43 ஆயிரம் கடன் தரவேண்டும் என்றும், இதற்காக 3.36 ஏக்கர் நிலத்தை சொத்து ஜாமீனாக கொடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல், இந்த சொத்துக்கான உத்தரவாதத்தை கஜேந்திரனின் நண்பர் ஒருவரும் அளித்திருந்தார்.
ஆனால் கடன் விண்ணப்பத்தை வங்கி நிராகரித்து விட்டது. அதைத் தொடர்ந்து, தனது விண்ணப்பம் நிராகரிப்பட்ட காரணத்தை அறிவதற்காக வங்கிக்கு தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கஜேந்திரன் விண்ணப்பம் செய்தார். ஆனால், அதற்கு வங்கி பதில் அளிக்கவில்லை. அதைத் தொடர்ந்து கஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில், தினேஷ் படிக்கும் `ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங்' படிப்பு, மத்திய அரசின் ஒப்புதல் பெறவில்லை என்பதால் எங்களுக்கு கல்வி கடன் மறுக்கப்படுகிறது. ஆனால், இந்த கல்லூரி கொடுத்துள்ள சான்றிதழில் இந்த படிப்பு மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், இதே கல்விக்கு 2 மாணவர்களுக்கு இந்த வங்கியின் சிவகங்கை மற்றும் சென்னை வண்ணாரப்பேட்டை கிளைகள் கடன் வழங்கியுள்ளன. எனவே, தினேசுக்கும் வங்கி கடன் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு பதில் அளித்த `பாங்க் ஆப் இந்தியா', மத்திய அரசின் கல்வி கடன் பட்டியலில் இந்த படிப்பு இடம் பெறவில்லை என்பதால் அவருக்கு கடன் வழங்க முடியாது எனக் கூறியது.
இந்த வழக்கை நீதிபதி என்.பால்வசந்தகுமார் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி, அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும் அதற்கான விதிமுறைகள் அடிப்படையில் கல்வி கடன் வழங்க வேண்டும். எல்லா படிப்புகளுக்கும் கடன் வழங்க வேண்டும் என்பது அந்த விதிமுறையில் உள்ளது. ஆனால், தினேஷ் விஷயத்தில் வங்கி பாரபட்சம் காட்டியுள்ளது. எனவே, இன்னும் 2 வாரத்துக்குள் தினேசுக்கு இந்த வங்கி கல்வி கடன் வழங்க வேண்டும். முறைப்படி விண்ணப்பம் செய்தும், உயர்நீதிமன்றம் வரை மாணவரை அலைகழித்ததால், மாணவரின் வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரத்தை இன்னும் 2 வாரத்துக்குள் ஆத்தூர் வங்கிக் கிளை வங்கி வழங்க வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

Subscribe to:
Posts (Atom)