Sunday, March 20, 2011

About Mutharasanallur discussion group

http://groups.google.com/group/MNallur/

செய்தி மற்றும் மக்கள் தொடர்பு குழு. இது முத்தரசநல்லூர் கிராம மக்களின் வளர்ச்சிக்காக செயல்படுகிறது. நீங்கள், முத்தரசநல்லூரின் வளர்ச்சி குறித்து கலந்துரையாடலாம். கருத்துக்களை அனுப்பலாம்.
முத்தரசநல்லூர் கிராம வளர்ச்சியில் ஆர்வமுள்ள அனைவரையும் அன்போடு வரவேற்கிறது. உங்கள் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி, உடனே இணையுங்கள் 

Apply for group membership | முத்தரசநல்லூரைப் பற்றி | முத்தரசநல்லூர் வலைப்பதிவு - பதிவுகள்


Mutharasanallur facebook page - Scren shot

Mutharasanallur facebook page - Screen shot as on March 20, 2011.


Take the advantage of technology and let's grow in our life.

Thanks
P. Jayaraman





Mutharasanallur Facebook page

My dear Native friends,

Please check out facebook page for Mutharasanallur. 
And I request you to become a fan of this page. 

Click here to see Mutharasanallur facebook page

Why facebook page?

You can share your thoughts easily in facebook page and it will reach in minutes in so many ways.

Regards
P. Jayaraman

Sunday, December 19, 2010

பெ‌ட்ரோ‌ல் ‌விலை உய‌ர்வு‌ம், கொ‌ந்த‌ளி‌ப்பு‌ம்!


புதன், 15 டிசம்பர் 2010( 16:05 IST )

கடந்த ஜூ‌ன் மாதம் பெட்ரோலுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டது. அதிலிருந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப, பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வருகின்றன. அப்படி நிர்ணயிக்கத் தொடங்கியதில் இருந்து இதுவரை 5 தடவை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு விட்டது. இந்நிலையில், நே‌ற்‌றிரவு 6வது தடவையாக பெட்ரோல் விலை உயர்த்தப்ப‌ட்டு ‌வி‌‌ட்டது.


பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் 96 காசுகள் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு, தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு அமலுக்கு வந்தது.

மற்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகியவையும் இதே அளவுக்கு பெட்ரோல் விலையை உயர்த்துகின்றன. இவற்றின் விலை உயர்வு அறிவிப்பு இன்று நள்ளிரவு அமலுக்கு வருகிறது. இத்துடன், இந்த ஆண்டில் மட்டும் 8வது தடவையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று ஒரு லி‌ட்ட‌‌ர் பெ‌ட்ரோ‌ல் ‌விலை ரூ.61.05 ஆக ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது.

ப‌த்‌தி‌ரிகை, தொலை‌க்கா‌ட்‌சி செ‌‌ய்‌திகளை படி‌க்காத, பா‌ர்‌க்காத வாகன‌ஓ‌ட்டிக‌ளு‌க்கு இ‌ன்று காலை‌யி‌ல் பெரு‌ம் அ‌தி‌ர்‌ச்‌சி கா‌த்‌திரு‌ந்தது. மு‌ன்பு 100 ரூபா‌ய் கொடு‌த்து பெ‌ட்ரோ‌ல் போட சொ‌ன்னா‌ல் 1.74 லிட்டர் அளவு இரு‌க்கு‌ம். இ‌ன்று 100 ரூபா‌ய் கொடு‌‌த்து பெ‌ட்ரோ‌ல் போ‌ட்டா‌ல் 1.64 லிட்டர் அளவே இரு‌ந்து‌ள்ளது. அ‌தி‌ர்‌ச்‌சி கல‌ந்த ஆ‌த்‌திர‌த்துட‌ன் பெ‌ட்ரோ‌ல் போடுபவ‌ரிட‌ம் ச‌ண்டைபோடு‌‌ம் வாகன ஓ‌ட்டி‌யிட‌ம், நே‌ற்று ‌‌ந‌ள்‌ளிரவு முத‌ல் ‌விலை உய‌ர்‌ந்து ‌வி‌ட்டதாக கூ‌றியது‌ம் ஆ‌ட்‌சியா‌ள‌ர்களை ச‌பி‌த்து‌க் கொ‌ண்டு செ‌‌ன்று‌வி‌‌‌ட்டா‌ர்.

ஆசை‌ப்ப‌ட்டு வாகன‌ம் வா‌ங்குபவ‌ர்க‌ளு‌க்கு த‌ற்போது பெ‌ட்ரோ‌‌ல் போடுவது பெரு‌ம் தலைவ‌‌லியாக ஆகி‌வி‌ட்டது. கா‌‌‌ங்‌கிர‌ஸ் தலைமை‌யிலான ஐ‌க்‌கிய மு‌ற்போ‌க்கு கூ‌ட்ட‌ணி‌‌‌அரசுக்கு வெ‌ளி‌யி‌‌ல் இரு‌ந்து இடதுசா‌ரிக‌ள் ஆதரவு அ‌ளி‌த்தன‌ர். அ‌ப்போது இடதுசா‌ரிக‌ள் உ‌‌ள்‌ளி‌ட்ட க‌ட்‌சிகளா‌ல் பெ‌ட்ரோ‌ல்- டீச‌ல் ‌விலை க‌ட்டு‌க்கு‌ள் இரு‌ந்தது. அமெ‌ரி‌க்காவுடனான அணுச‌‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் தொட‌ர்பாக இடதுசா‌ரிக‌ள் ‌ஆதரவை விளக்கிய‌தை‌த் தொட‌‌ர்‌ந்து ம‌த்‌திய அரசு‌க்கு பெ‌ட்ரோ‌ல் ‌விலையை உய‌ர்‌‌த்த ந‌ல்ல வா‌ய்‌ப்பாக அம‌ை‌ந்து ‌வி‌ட்டது.

பெட்ரோலுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரம் எ‌ன்றை‌க்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டதோ அ‌ன்று முத‌ல் வாகன‌ம் வை‌த்‌திரு‌ப்பவ‌ர்களு‌க்கு தலை‌‌யி‌ல் இடி ‌விழு‌ந்த மா‌தி‌ரி ஆ‌‌‌கி‌‌வி‌ட்டது.

ஒரு ப‌க்க‌ம் ஒரு ரூபாய் கொடு‌த்து ‌வி‌ட்டு ‌நீ‌ங்க‌ள் ‌விரு‌ம்பு‌ம் வாகன‌ங்‌களை எடு‌த்து செ‌ல்லலா‌ம் எ‌ன்று கா‌ர், இருச‌க்கர ‌நிறுவன‌ங்கள் விள‌ம்பர‌ம் செ‌ய்து வரு‌கி‌ன்றன. ஆனா‌ல் ‌த‌ற்போது பெ‌ட்ரோ‌‌ல் ‌விலையை உய‌ர்வை பா‌ர்‌த்து வாகன‌ங்கள் வா‌ங்கு‌ம் எ‌‌ண்ண‌த்த‌ையே ம‌க்க‌ள் மற‌ந்து‌விட வே‌ண்டியதுதா‌ன்.

ஐ‌க்‌கிய மு‌ற்போ‌க்கு கூ‌ட்ட‌‌‌ணி‌யி‌ல் இரு‌‌க்கு‌ம் ‌தி.மு.க.வு‌ம் இதை க‌ண்டு கொ‌‌ள்வது ‌கிடையாது. பெயரளவு‌க்கு பெ‌ட்ரோ‌ல் ‌விலை உய‌ர்வா‌‌ல் நகர வாழ் நடுத்தர ம‌க்க‌ள் வெகுவாக பா‌தி‌க்க‌ப்படுவா‌ர்க‌ள். எனவே இத‌ன் ‌விலையை உடனடியாக ‌ம‌த்‌திய வில‌க்‌கி‌க் கொ‌ள்ள வே‌‌ண்டு‌‌ம் எ‌ன்று கூ‌றி நழு‌வி‌க் கொ‌ள்வா‌ர் ‌தி.மு.க. தலைவரு‌ம், முதலமை‌ச்சருமான கருணா‌நி‌தி.

இ‌ப்படி தராறுமாறாக பெ‌ட்ரோ‌ல் ‌விலையை உய‌ர்‌‌த்‌தி வரு‌ம் ம‌த்‌திய அரசு‌க்கு தே‌‌ர்த‌ல் நேர‌த்தி‌ல் தா‌ன் ம‌க்க‌ள் ச‌ரியான பாட‌ம் க‌ற்‌பி‌க்க முடியு‌ம். தே‌ர்த‌‌லி‌ல் அதையு‌ம் செ‌ய்ய‌த் தவ‌றினா‌ல் ‌ம‌க்க‌ளி‌ன் ‌நிலைமை கே‌ள்‌வி‌க்கு‌றிதா‌ன்?

தகவல்கள்:
http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1012/15/1101215032_1.htm
http://ibnlive.in.com/news/fuel-price-hike-from-rs-10-to-rs-56-in-20-years/137558-7.html
http://harinipunch.blogspot.com/

Saturday, December 18, 2010

தன்மானத் தமிழன் விவசாயி விஜயகுமார்

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக் கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.


கடந்த 23-ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க.செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது.அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து விஜயகுமார் என்ற பெயர் வாசிக்கப்பட்டதும்,கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச் சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி மேடையேறினார். அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கிக் கொண்டார்.ஒரு விநாடி அங்கே நின்றவர்,டி.வி.யை பெரியண்ண அரசுவிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு,கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார்.ஏதோ கோரிக்கை மனு கொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக வாங்கிப் படித்தார்.

அதில் 'மனிதனுக்கு டி.வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால் அதைவிட முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள் இருக்கின்றன. இவை தன்னிறைவு அடைந்து விட்டனவா? குறிப்பாக, விவசாயிகளைப் பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு அடைந்து விட்டதா? துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும் எங்கிருந்து நிதி வந்தது?இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள் தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழங்கும் பணத்தை வைத்து விவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.

தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு அடையச் செய்திருக்கலாம். இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான மருத்துவம், கல்வி, மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினாலே போதும்.  அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார் வரை அனைத்தையும் வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து தன்னிறைவு அடைந்து விடுவோம்.

விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, லஞ்சம், ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந்த டி.வி. வேண்டாம்.

முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும் உள்ளது. எனவே,இந்த டி.வி.யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.அவர் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம் மேலும் வேதனைப்படும். அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச்
செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும்' என்று நீண்டது அந்த மனு.  இதைப் படித்த பெரியண்ண அரசு முகத்தில் ஈயாடவில்லை.அருகில் இருந்த அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். என்றாலும் அந்த மனுவையும் டி.வி.யையும் வாங்கி வைத்துக் கொண்டு மேலும் பரபரப்பை உண்டாக்காமல் விஜயகுமாரை அனுப்பி வைத்தார் அரசு.

இதன் பின்னர் விஜயகுமாரிடம் பேசினோம்.

"நான் ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகள் எல்லாம் மின்வெட்டால் பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் ஸ்டேட்காரன்கிட்ட வித்துட்டு நகரத்துல போய் கூலி வேலைக்கும்,ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்கிட்டிருக்கான்.  இந்த நிலை, நாளைக்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வரப் போகிறது. எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய் இருக்கிறது. ராத்திரியில படுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது.

சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும் வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு.ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும் ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில் ரெண்டு கோடி குடும்ப அட்டைகள் இருக்கு.2கோடி குடும்ப அட்டைக்கும் டி.வி. கொடுத்தால் இருபது லட்சம் கோடி செலவாகும்.இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு அடையச் செய்தாலே போதுமே.

கனத்த இதயத்தோடும், வாடிய வயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு டி.வி.? அவன் பொழப்பே சிரிப்பா சிரிக்கும்போது அவன் டி.வி. பாத்து வேற சிரிக்கணுமாக்கும்.அதுனாலதான் நான் டி.வி.யை திருப்பிக் கொடுத்தேன்'' என்றார்.

டி.வி.யை திருப்பிக் கொடுத்த கையோடு முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார்.  அந்தக் கடிதத்தில் 'கொத்தமங்கலத்துக்கு வந்த டி.வி.க்கள் 2519. அதில் 2518 மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒரு டி.வி.யை எனது அன்புப் பரிசாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்'என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ் செய்துள்ளார்.

மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்படும் லஞ்சம் தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார் பொட்டில் அடித்தாற்போல் தெளிவுபடுத்தியுள்ளார். மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசத்துக்கு எதிராக போர் தொடுத்திருக்கும் அவரை பாராட்டத்தான் வார்த்தைகளே கிடைக்கவில்லை...!

பின்குறிப்பு: இந்த செய்திக்கான ஆதாரம் கிடைக்கவில்லை.  ஆனாலும் இதுபோல் தமிழன் ஒவ்வொருவரும் விழித்துக்கொண்டால், தமிழனை யாராலும் ஏமாற்ற முடியாது.

அன்புடன்
ப. ஜெயராமன்
Jayaram10g