Sunday, October 15, 2006

முத்தரசநல்லூர் - அறிமுகம்

முத்தரசநல்லூர் - அறிமுகம்

இந்தியாவின் தென்கோடியில் தமிழ்நாடு மாநிலம் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் மையப்பகுதியில் திருச்சிராப்பள்ளி மாநகரம் உள்ளது. இந்த திருச்சி மாநகரத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் காவிரி ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஓர் அழகிய கிராமம்தான் முத்தரசநல்லூர்.

2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள், 7 -10 தெருக்கள், சிவன் கோவில், மதுரகாளியம்மன் கோவில், மாரியம்மன் கோவில், சில தென்னந்தோப்புகள், மாந்தோப்புகள், 10-15 கடைகள், தபால் நிலையம், மின்னனு தெலைபேசி நிலையம், ஒரு திருமண மண்டபம், சுமார் 200 - 300 ஏக்கர் விளைநிலம் இவையனைத்தும் முத்தரசநல்லூர் கிராத்தை செழுமை படுத்துகிறது.

இங்கு இரயில் தண்டவாளம், திருச்சி-கரூர் பைபாஸ் சாலை, காவிரி ஆறு இவை மூன்றும் அருகருகே இருப்பதை காணலாம்.



இந்த ஊரில் வாழும் மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக இப்பதிவு உழைக்கும்.

நோக்கங்கள்
  • பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் பள்ளிக்கு அனுப்புதல்
  • மாணவர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்கி அவர்களின் முன்னேற்றத்துக்கு உதவுதல்
  • வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை வெளியிடுதல்
  • கிராமத்தைப் பற்றி தகவல்களை வெளியிடுதல்
  • மரம் வளர்க்க மக்களை ஊக்குவித்தல்
  • அழகான கிராமமாக மாற்றுதல்
  • அரசிடமிருந்து வரும் திட்டங்கள் அனைத்தையும் மக்களை சென்றடைய உதவுதல்
  • அவ்வபோது நிகழும் நிகழ்வுகளை பதிவு செய்தல்
  • மற்றும் பல.....
முத்தரசநல்லூர் மக்கள் அனைவமும் இந்த பணியில் தங்களின் பங்களிப்புகளை வழங்கலாம். வாருங்கள்! முத்தரசநல்லூர் மக்களுக்காக, சமூக பணியாற்ற நமது நேரத்தை சிறிது செலவிடுவோம்!!

என்றும் அன்புடன்,
ப. ஜெயராமன்,
முத்தரசநல்லூர் கிராமம்.


No comments: