செய்தி மற்றும் மக்கள் தொடர்பு வலைத்தளம். இது முத்தரசநல்லூர் கிராம மக்களின் வளர்ச்சிக்காக செயல்படுகிறது.
Wednesday, December 27, 2006
முத்தரசநல்லூர் பற்றிய கட்டுரை விக்கிபீடியாவில்...
Tuesday, December 12, 2006
கிராம யோகா வகுப்புகள்
அன்புள்ள முத்தரசநல்லூர் குழு நண்பர்களே!
வணக்கம். யோகா வகுப்புகள் இந்த 2006ம் வருடம், டிசம்பர் மாதம், கடைசி வாரத்தில் முத்தரசநல்லூரில் நடைபெற இருப்பதாக கேள்வியுற்று மகிழ்ச்சியடைந்தேன்.
நான், கடந்த 1999ம் வருடம், மே மாதத்தில், E.R. மேனிலைப்பள்ளியில் நடந்த யோகா வகுப்பில் கலந்து கொண்டேன். அப்போதே எனக்கு, என்னை சுற்றி உள்ள அனைவரையும் இந்த வகுப்பில் கலந்துகொள்ள செய்ய வேண்டும் என்ற உணர்வு உருவானது. முதலில் எனது நண்பர்கள் சிலரையும், என் குடும்பத்தில் சிலரையும் அனுப்பி வைத்தேன். நான் பலரிடம் இந்த வகுப்பில் கலந்து கொள்ளும்படி பரிந்துரை செய்திருக்கிறேன். ஆனால், நேரமின்மை, பொருளாதார வசதி போன்ற காரணங்களால் எல்லோராலும் போக முடியவில்லை.
இப்போது, ஈசா யோகா வகுப்பு, முத்தரநல்லூரை தேடி வந்திருக்கிறது. இந்த வாய்ப்பை நமது கிராம மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள அனைவரிடமும் இதைப்பற்றி தெரிவிக்கவேண்டும். இதில் கலந்து கொள்ள நன்கொடையாக ரூ.250/- பெறுகிறார்கள். இடம், துவங்கும் நாள், பதிவு செய்வது போன்ற விபரங்களுக்கு, பழனியாண்டவர் மெடிக்கலில் உள்ள திரு. P. மோகன் அவர்களை தொடர்பு கொள்ளவும்.
அன்பான, ஆராக்கியமான, அமைதியான முத்தரசநல்லூரை உருவாக்குவோம்!
இந்த மகத்தான பணியில் உங்களையும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறேன்!!
அன்புடன்,
ப. ஜெயராமன்
Sunday, November 12, 2006
Group for Muttharasanallur People
Thursday, November 02, 2006
யூனிக்கோடு என்றால் என்ன?
யூனிக்கோடு என்றால் என்ன?
யூனிக்கோடு எந்த இயங்குதளம் ஆயினும், எந்த நிரல் ஆயினும், எந்த மொழி ஆயினும் ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்துவமான எண் ஒன்றை வழங்குகிறது.அடிப்படையில் கணினிகள் எண்களுடன்தான் தொழிற்படுகின்றன. அவை எழுத்துக்களையும் பிற வரியுருக்களையும் எண்வடிவிலேயே சேமிக்கின்றன. யூனிக்கோடு கண்டறியப்படு முன்னர் இவ்வாறு எழுத்துக்களுக்கு எண்களை வழங்க நூற்றுக்கணக்கான குறியீட்டு முறைகள் இருந்தன. இவற்றில் எந்தவொரு முறையிலும் போதுமான அளவு எழுத்துக்கள் இருக்கவில்லை: உதாரணமாக, ஐரோப்பிய ஒருங்கியத்திலுள்ள மொழிகளை உள்ளடக்கவே பல்வேறு குறியீட்டு முறைகள் தேவைப்பட்டன. ஆங்கில மொழியில் கூட எந்தவொரு குறியீட்டு முறையினாலும் பொதுவாகப் புழங்கும் எல்லா எழுத்துக்களையும், தரிப்புக் குறிகளையும், மற்றும் தொழிநுட்பக் குறிகளையும் உள்ளடக்க முடியவில்லை.மேலும் இக்குறியீட்டு முறைகள் ஒன்றுடன் ஒன்று முரண்படுகின்றன. அதாவது, இரு குறியீட்டு முறைகள், இரு வேறு எழுத்துக்களுக்கு ஒரே எண்ணையோ, அல்லது ஒரே எழுத்துக்கு இரு வேறு எண்களையோ புழங்கலாம். இதனால் எந்தவொரு கணினியும் (குறிப்பாகப் பரிமாறிகள்) பல்வேறு குறியீட்டு முறைகளை ஆதரிக்க வேண்டியுள்ளது; இந்நிலையிலும் வெவ்வேறு குறியீட்டு முறைகளுக்கு இடையிலோ அல்லது இயங்குதளங்களுக்கு இடையிலோ தரவுகள் பரிமாறப்படும் போது, அத் தரவுகள் பழுதுபடச் சாத்தியமுள்ளது.யூனிக்கோடு இவற்றையெல்லாம் மாற்றியமைக்கிறது!
யூனிக்கோடு எந்த ஒரு மொழியிலும், எந்த ஓர் இயங்கு தளத்திலும், எந்த ஒரு நிரலிலும், ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்துவமான எண்ணொன்றை வழங்குகிறது. Apple, HP, IBM, JustSystem, Microsoft, Oracle, SAP, Sun, Sybase, Unisys போன்ற பல முன்னணி நிறுவனங்கள் யூனிக்கோடுத் தரத்தை ஏற்றுக் கொண்டுள்ளன. XML, Java, ECMASCript (JavaScript), LDAP, CORBA 3.0, WML போன்ற நவீன தராதரங்களுக்கு யூனிக்கோடு அவசியம். அத்துடன் ISO/IEC 10646 தரத்தைச் செயற்படுத்த அதிகாரப்பூர்வமான வழி யூனிக்கோடு ஆகும். பல இயங்கு சிட்டங்களும், அனைத்து வலையுலாவிகளும், மேலும் பல மென்பொருட்களும் யூனிக்கோட்டை ஆதரிக்கின்றன. யூனிக்கோடு தரத்தின் தோற்றமும், அதனை ஆதரிக்கும் கருவிகள் கிடைப்பதும், அண்மைய உலகளாவிய மென்பொருட் தொழிநுட்பப் போக்கில் முக்கியமான நிகழ்வுகளாகும்.சார்புச்சேவை அல்லது பல்லடுக்குப் பயன்நிரல்களிலும், வலைத்தளங்களிலும், பழைய குறியீட்டு முறைகளை விடுத்து யூனிக்கோட்டை உள்ளமைப்பதன் மூலம் கணிசமான நிதிச் சிக்கனத்துக்கு வழியுண்டு. யூனிக்கோடு ஒரு தனி மென்பண்டத்தையோ அல்லது ஒரு தனி வலைத்தளத்தையோ, எந்தவிதமான மீளமைப்புமின்றி, பல இயங்குதளங்கள், மொழிகள், நாடுகளை இலக்காகக் கொண்டு தயாரிக்க உதவுகின்றது. யூனிக்கோடு மூலம் பல்வேறு கணினி அமையங்களுக்கு ஊடாகத் தரவுகளைப் பழுதின்றி அனுப்பலாம்.யூனிக்கோடு ஒன்றியம் பற்றிய தகவல்
யூனிக்கோடு ஒன்றியம், நவீன மென்பொருட்களிலும் தராதரங்களிலும் உரைக் குறியீடுகளை வரையறுக்கும் யூனிக்கோடுத் தரத்தை உருவாக்கி, மேம்படுத்தி, பரப்புவதற்கான இலாப நோக்கற்ற நிறுவனம். கணினி மற்றும் தகவற் தொழிநுட்பத் துறையைப் பரந்தளவில் பிரதிநிதித்துவப்படுத்தும் வண்ணம் பல்வேறு கூட்டமைப்புக்களும் நிறுவனங்களும் இவ்வொன்றியத்தில் அங்கம் வகிக்கின்றனர், உறுப்பினர்கள் செலுத்தும் உறுப்பியத் தொகைகளினால் மட்டுமே இவ்வொன்றியம் நிதி பெறுகிறது. யூனிக்கோடுத் தரத்தை ஆதரித்து அதன் விரிவாக்கத்திலும் செயற்பாட்டிலும் பங்களிக்க விரும்பும் எந்தத் தனி நபரும் கூட்டுக்கழகமும் யூனிக்கோடு ஒன்றியத்தின் உறுப்பினர் ஆகலாம்.மேலதிக விவரங்களுக்குச், சொற்களஞ்சியம், யூனிக்கோடு ஆதரவுள்ள மென்பொருட்கள் , தொழிநுட்ப அறிமுகம் மற்றும் பயனுள்ள வளங்கள் என்பவற்றைப் பார்க்கவும்.Tamil translation by Thuraiappah Vaseeharan
Sunday, October 29, 2006
முத்தரசநல்லூர் - 3000 அடி உயரத்தில்...
Saturday, October 21, 2006
முத்தரசநல்லூர் - செயற்கைகோள் புகைப்படம்
முத்தரசநல்லூரை சுமார் 7176 அடி உயரத்திலிருந்து புகைப்படம் எடுத்து பார்த்து இருக்கிறீர்களா? இல்லை என்றால் கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள். இது செயற்கைக்கோளிலிருந்து எடுக்கப்பட்டது.
இந்தப்படத்தை முதல் முறை பார்க்கையில், மிகுந்த ஆச்சரியத்தோடும், பிரமிப்போடும் பார்த்தேன். உங்களுக்கும் இந்ந ஆச்சரியம் இருக்கும் என்று நினைக்கிறேன். தவறாமல் இதைப்பற்றிய தங்களின் கருத்துக்களை mnallur@googlegroups.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புவீர்கள் என்று நம்புகிறேன். இப்புகைப்படத்தை எனது தீபாவளி பரிசாக ஏற்றுக்கொள்ளுங்கள்.
அன்புடன்
ப. ஜெயராமன்
முத்தரசநல்லூர்
Thursday, October 19, 2006
Happy Diwali!
தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
Regards,
Sunday, October 15, 2006
முத்தரசநல்லூர் - அறிமுகம்
இந்தியாவின் தென்கோடியில் தமிழ்நாடு மாநிலம் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் மையப்பகுதியில் திருச்சிராப்பள்ளி மாநகரம் உள்ளது. இந்த திருச்சி மாநகரத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் காவிரி ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஓர் அழகிய கிராமம்தான் முத்தரசநல்லூர்.
2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள், 7 -10 தெருக்கள், சிவன் கோவில், மதுரகாளியம்மன் கோவில், மாரியம்மன் கோவில், சில தென்னந்தோப்புகள், மாந்தோப்புகள், 10-15 கடைகள், தபால் நிலையம், மின்னனு தெலைபேசி நிலையம், ஒரு திருமண மண்டபம், சுமார் 200 - 300 ஏக்கர் விளைநிலம் இவையனைத்தும் முத்தரசநல்லூர் கிராத்தை செழுமை படுத்துகிறது.
இங்கு இரயில் தண்டவாளம், திருச்சி-கரூர் பைபாஸ் சாலை, காவிரி ஆறு இவை மூன்றும் அருகருகே இருப்பதை காணலாம்.
இந்த ஊரில் வாழும் மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக இப்பதிவு உழைக்கும்.
நோக்கங்கள்
- பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் பள்ளிக்கு அனுப்புதல்
- மாணவர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்கி அவர்களின் முன்னேற்றத்துக்கு உதவுதல்
- வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை வெளியிடுதல்
- கிராமத்தைப் பற்றி தகவல்களை வெளியிடுதல்
- மரம் வளர்க்க மக்களை ஊக்குவித்தல்
- அழகான கிராமமாக மாற்றுதல்
- அரசிடமிருந்து வரும் திட்டங்கள் அனைத்தையும் மக்களை சென்றடைய உதவுதல்
- அவ்வபோது நிகழும் நிகழ்வுகளை பதிவு செய்தல்
- மற்றும் பல.....
என்றும் அன்புடன்,
ப. ஜெயராமன்,
முத்தரசநல்லூர் கிராமம்.