அன்பு முத்தரசநல்லூர் நண்பர்களே,
நான் பள்ளிப் படிப்பில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வரலாறுகளை படித்துள்ளேன். அப்போதெல்லாம், நாம் பிறந்து வளர்ந்த இந்த முத்தரசநல்லூர் பற்றி தெரிந்து கொள்ள ஏதாவது குறிப்பு இருக்கிறதா என்று நூலகத்தில் தேடியிருக்கிறேன். கிடைக்கவில்லை. இனி வரும் சந்ததியினருக்காவது, நாம் ஒரு குறிப்பை விட்டுச் செல்லலாம் என்று நமது "முத்தரசநல்லூர்" பற்றிய செய்தியை ஒரு கட்டுரையாக இணைத்துள்ளேன். இது இன்னும் முழுமையடையவில்லை. படித்து பாருங்கள், உங்களுக்கு அல்லது உங்கள் பெற்றோர், தாத்தா ஆகியோருக்கு ஏதெனும் தகவல் தெரிந்திருந்தால், இக்கட்டுரையில் இணைக்கலாம்.
புதிய தகவல்களை நீங்களே இணைக்கலாம். இல்லையேல் என்க்கு அனுப்புங்கள் நான் இணைத்து விடுகிறேன்.
உங்கள் குழந்தைகளுக்கு, இக்கட்டுரையைப்பற்றி அறிமுகப் படுத்துங்கள். அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள்.
கீழே உள்ள இணைப்பை (link) உங்கள் மவுஸினால் சொடுக்கினால், நீங்கள் "முத்தரசநல்லூர்" கட்டுரையை விக்கிபீடியாவில் படிக்கலாம்
அன்புடன்
ப. ஜெயராமன்.
விக்கிபீடியாவில் "முத்தரசநல்லூர்" கட்டுரையின் ஸ்கிரீன் ஸாட் (Screen shot)
No comments:
Post a Comment