Tuesday, June 30, 2009

இந்தியாவின் தேசிய அடையாள அட்டை ஆணையத்தின் தலைவராகிறார் நிலகேனி

தேசிய அடையாள அட்டை ஆணையத்தின் தலைவராகிறார் நிலகேனி
(Source: http://www.makkalmurasu.com/index.php?mod=article&cat=business&article=10626)

பெங்களுர், ஜுன். 26  இந்தியாவின் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இன்போசிஸ் துணைத்தலைவர் பதவியிலிருந்து நிலகேனி விலக உள்ளார்.
நிலகேனி தேசிய அடையாள அட்டை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட உள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்கின் அழைப்பை ஏற்று நிலகேனி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.  நிலகேனி தற்போது ஏற்றுக் கொள்ள உள்ள பொறுப்பானது மத்திய கேபினட் அமைச்சர் பதவிக்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது.

Nilekani

இன்போசிஸ் பொறுப்புகளிலிருந்து நிலகேனி விலகல்-ஸமார்ட் கார்டு ஆணைய தலைவராகிறார்.
(Source: http://thatstamil.oneindia.in/news/2009/06/25/business-nilekani-to-step-down-as-infosys-board.html)

பெங்களூர்: இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் இணைத் தலைவர் மற்றும் போர்டு உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து நந்தன் நிலகேனி விலகுகிறார்.

இந்திய குடிமக்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் பணிகளை மேற்கொள்வதற்காக தொடங்கப்படும் புதிய ஆணையத்தின் தலைவர் பொறுப்பை அவர் ஏற்கவுள்ளதால் இன்போசிஸ் பொறுப்புகளை ராஜினாமா செய்கிறார்.

இந்திய குடிமக்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. அதன்படி ஒவ்வொரு குடிமக்களுக்கும் தேசிய அடையாள அட்டை வழங்கப்படும்.

அதற்கு முன்னோட்டமாக நாட்டு மக்கள் குறித்த தகவல் தொகுப்பை தொகுக்க தனி ஆணையம் ஒன்றை உருவாக்கியுள்ளது மத்திய அரசு. அந்த அமைப்பின் தலைவராக செயல்படுமாறு நிலகேனிக்கு, பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.

மத்திய கேபினட் அமைச்சர் அந்தஸ்திலான பொறுப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. இதை நிலகேனியும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

இதையடுத்து இன்போசிஸ் இணைத் தலைவர், போர்டு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்பபுகளை அவர் ராஜினாமா செய்யவுள்ளார்.

இன்போசிஸ் தவிர்த்த வேறு ஒரு மிகப் பெரிய வேலையை நிலகேனி மேற்கொள்வது முதல் முறையல்ல. ஏற்கனவே பெங்களூர் டாஸ்க் போர்ஸின் தலைவராக அவர் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் யாருக்கு அட்டை...

தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக மத்திய திட்டக் கமிஷன், இந்திய அடையாள அட்டை ஆணையத்தை உருவாக்கியுள்ளது. இதன் தலைவராகத்தான் நிலகேனி செயல்படப் போகிறார்.

இந்த நிறுவனம் 2011ம் ஆண்டுக்குள் குடிமக்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்கும். முதல் கட்டமாக அனைத்து வாக்காளர்களுக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்படும். அடுத்த கட்டமாக மற்றவர்களுக்கு அளிக்கப்படும்.

உள்துறை அமைச்சகத்தின் தேசிய மக்கள் தொகைப் பதிவாளர் அலுவலகத்துடன் இணைந்து இந்தப் பணியை ஆணையம் மேற்கொள்ளும்.

தேசிய அடையாள அட்டையை பல்வேறு பணிகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பன்முகம் கொண்டதாக இருக்கும்.

இந்த பிரமாண்ட திட்டத்திற்காக பிரணாப் முகர்ஜி கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டிருந்தது.

No comments: